களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்


களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள். (Siva Tams)

வழிமுறைகள்

முதலில் களஞ்சியம் செயலியை திறக்கவும்,

அதில் External Apps ஐ கிளிக் செய்யவும்,

அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும்,

பின்னர் தமிழ்நாடு NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN-NHIS App install பண்ணி இருந்தால் அதில் Open -ஐ கிளிக் செய்யவும்,

TN-NHIS App install பண்ணவில்லை என்றால் 

இங்கே கிளிக்

https://play.google.com/store/apps/details?id=com.tnhealthschemev2

அதை install செய்த பிறகு Open -ஐ கிளிக் செய்யவும்

பின்னர் TN- NHIS என்ற திரை தெரியும் அதன் இடது பக்க கார்னரில் மூன்று சிறிய கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்,

பின்னர் உள்நுழைவு பக்கம் வரும் அதில் பயனர் பெயர் எந்த கட்டத்தில் தங்களின் அட்டை எண் ஐ டைப் செய்யவும்,

கடவுச்சொல் என்ற கட்டத்தில் தங்களின் பிறந்த நாள் -மாதம்-வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும் (உ-ம் 01-02-1960)

அதற்கு கீழே உள்ள உள்நுழைவு ஐ கிளிக் செய்தவுடன் வெற்றிகரமாக உள்நுழைந்தது என்று தோன்றி மறைந்து விடும்.

பின்னர் மீண்டும் TN- NHIS என்ற திரை தெரியும். அதில் தங்களின் பெயர் மற்றும் கார்டு எண் தெரியும்.

அதற்கு கீழே உள்ள Menu வில் E- Card ஐ கிளிக் செய்தவுடன் தங்களின் TN-NHIS Card பதிவிறக்கம் ஆகி விடும்.

பதிவிறக்கம் ஆன அட்டை தங்களின் போன் எனது கோப்பு அல்லது கோப்பு மேலாளர் பதிவிறக்கத்தில் இருக்கும்.

அதை open செய்து பார்க்கலாம் கணினி மையத்தில் Print Out எடுத்து கொள்ளலாம்.

Siva Tams.


Comments

Popular posts from this blog

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு