இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன.
தமிழ்நாட்டில் 38 அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. இவை தவிர சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 454 இருந்தன. சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதில் 2 ஆயிரத்து 240 பேர் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஏராளமான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.
காரணம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, அதில் அதிக மார்க்கு எடுத்தால்தான் ஆசிரியர் வேலை வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த வருடம் மட்டும் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றால் அதன் முடிவு விரைவில் வெளியிடப்படுகிறது. ஆனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதினால் அதன் முடிவு வர குறைந்தபட்சம் 6 மாதம் ஆகிறது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த புகார் அரசு தேர்வுத்துறை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடமும் எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் இந்த வருடம் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இணைப்பு பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) கடந்த 23-ந்தேதி முதல் 1 மாதம் நடத்தப்படுகிறது. இதில் கல்லூரிஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகியவற்றில் தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு