தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு

RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு
அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பதில் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு பொது தகவல் அலுவலர் முறைப்படி பதில் அளிக்க வேண்டும்.


அதில், விண்ணப்பதாரருக்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில் மீண்டும், அந்த அலுவலரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதில், ஏற்படும் சிரமத்தை தவிர்க்க தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிப்பதில் கூடுதல் மாற்றங்களை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தகவல் பெறும் உரிமை சட்டப்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கும் பதிலில் விண்ணப்ப எண்,பெறப்பட்ட தேதி,தகவல்தரும் அலுவலர் பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் கேட்ட தகவலை தெரிவிக்க முடியாது என்றால் அதற்குரிய காரணத்தை குறிப்பிடவேண்டும். இதே விண்ணப்பத்தை மற்றொரு தகவல் தரும் அதிகாரிக்கு மாற்றினால், அதன் விபரத்தையும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். பதிலை முடிப்பதற்கு முன் முதல் முறை விண்ணப்பமா, மேல்முறையீடா என தெரிவிக்க வேண்டும். பதில் தரும் போது ஏதேனும் ஆவணங்களை அளித்தால், அதற்கான ஆவணங்களில் சான்றொப்பம் இட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது எனதெரிவிக்க வேண்டும். அந்த பதிலில் தேதி, தகவல் தரும் அலுவலர் பெயர், அலுவலகமுத்திரையை குறிப்பிட்டு சான்றொப்பம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு