30.09.22 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 4.30 - 6.00 மணிக்கு நடத்தப்பட வேண்டும் - மாநில திட்ட அலுவலர் செயல்முறை.

 Siva Tam's Tpt

SMC மீட்டிங் அட்டெண்டன்ஸ் | SMC தலைவர் உள்நுழைவு | SMC தலைவர்

https://youtu.be/rtyu4rMwzxQ


அனைவருக்கும் வணக்கம் 

அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் நாளை 30.09.22 அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடத்தப்பட வேண்டும் ஆறு மணி வரை கூட்டமானது நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் மாநில திட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட செயல்முறைகளின் அடிப்படையில் கூட்டமானது நடத்தப்பட வேண்டும். கண்டிப்பாக App ல மட்டும் வருகைப்பதிவு பதிவிட வேண்டும். நமது மாவட்டத்தில் கடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டம் முடிவுற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் பள்ளிகளின் வருகை பதிவு பதிவிடாதது கண்டறியப்பட்டுள்ளது ஆகவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் கட்டாயமாக உறுப்பினர்களின் வருகை பதிவினை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் கைப்பேசி மூலம் மட்டுமே வருகையினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டிடங்கள் இதர தேவையான வசதிகள் குறித்து விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் நமது மாவட்டத்திற்கு பார்வையாளராக மாநில திட்ட இயக்கத்தில் இருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் பள்ளியில் கூட்டம் நடைபெறும் பொழுது கண்காணிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு சில பள்ளிகள் காலையில் நடைபெற்று முடிந்ததாக தகவல் மாநில திட்ட அலுவலகத்திற்கு தரப்பட்டுள்ளது ஆகவே நாளை நடைபெற உள்ள கூட்டத்தினை ஒதுக்கப்பட்ட நேரத்தில் நடத்தி முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் அந்தந்த குடியிருப்பு பகுதிகளை சார்ந்த தொடக்க மற்றும் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மதிப்புமிகு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல மாநில திட்ட இயக்குனர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது இனி வருங்காலங்களில் App மூலமாகவே அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் ஆகவே தலைமையாசிரியர் பெருமக்கள் தங்கள் பள்ளிகளின் தேவைகளை App மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு