முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..

 Siva Tam's Tpt.    


*முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*.. 


காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..


அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது  அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.) 


பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..


அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.


செலவு ஏதும் கிடையாது.

இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு  ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரிஸ் , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..

*இந்த செய்தி அனைத்து மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.*

இது போன்ற அரசு நலத்திட்டங்கள் மக்கள் நலன் குறித்த விபரங்களையும் நமது குழுக்கள் மூலம்  பகிர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு