போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல்.

 சிவா தமின் Tpt.    



முக்கியச் செய்தி


போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். 


சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது! 


பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! 


நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.


நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 


எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, 

உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.


(நில சர்ச்சைகள்)


1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது 

*பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.


நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018


சென்னை உயர்நீதிமன்றம் - WP No - 24839/2014, dt - 16.7.2018

WP எண் - 491/2012, dt - 4.6.2014

WP எண் - 16294/2012, dt - 4.4.2014


2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை இருப்பதாகக் கருதப்பட வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.


SA எண் - 313 & 314/2008, dt - 11.2.2019


3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 

தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.


WP எண் - 13916/2019, dt - 1.7.2019


4. சொத்து உரிமையாளர் யார் என்பதை வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.


WP எண் - 18489/2009, dt - 1.7.2011


5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. ஆவண பதிவு எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான் உரிமையாளர் என்று கூற முடியாது.


SA எண் - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்


6. பட்டா சொத்து உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 

*பட்டாவை* வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.


SA எண் - 2060/2001, dt - 2.11.2012

SA எண் - 1715/1989, dt - 25.6.2002

WP எண் - 16294/2012, dt - 3.4.2014


7. கிராம *நத்தம்* நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு 

பட்டா வழங்க வேண்டும்.


சென்னை உயர் நீதிமன்றம்

WP எண் - 18754, 20304, 2613/2005

டிடி - 4.11.2013

 AK தில்லைவனம் Vs தி மாவட்ட ஆட்சியர், சென்னை அண்ணா மாவட்டம் (2004 - 3 - CTC - 270)

செயல் அலுவலர், கடத்தூர் நகர பஞ்சாயத்து Vs VS சுவாமிநாதன் (2012 - 2 - CTC - 315)


8. பட்டா பெயர் மாற்றம் செய்ய 

நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். 

WP எண் - 19428/2020, dt - 6.1.2021 (KA ரவிச்சந்திரன் Vs மாவட்ட ஆட்சியர், வேலூர் மற்றும் பலர்) 


9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை

பணி நீக்கம் செய்ய வேண்டும். 


WP எண் - 11279/2015, dt - 22.3.2019, மதுரை உயர் நீதிமன்றம் 


10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா 

*பட்டா* மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.


TR தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)

அம்சவேணி Vs DRO மதுரை. டபிள்யூ. பி எண் - 16294/2012...


கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, அவர்களின் தீர்ப்புகளை மக்களுக்கு எடுத்துச் சென்று விழிப்புணர்வு உணர்வு

ஏற்படுத்துங்கள்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு