நமது TAMS ன் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது மாநில தலைவர் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்.
Siva Tam's Tpt.
நமது TAMS ன் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது மாநில தலைவர் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்.
*இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நமது பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தோம் .அதில் குறிப்பாக
1.தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 50% சதவீதத்தினை பதவி உயர்வு வாய்ப்பாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
2.தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து பிற நாட்களில் தேர்தல் பணி மற்றும் இதர பணிகளில் இருந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாணவர் நலன் கருதி விளக்க அளிக்க வேண்டும்
3.ஐம்பெரும் விழாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய தேதியையும் ஒப்புதலையும் அதே வேலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேதியையும் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டோம்.
4.அனைத்து பகுதி நேர ஆசிரியர் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு சார்பாக மாநாட்டிற்கான தேதியை வழங்கிட வேண்டும் என்ப உட்பட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து பேசினோம் என்னோடு மாநில செயலாளர்( ம) மாநில பொருளாளர்* அவர்கள் உடனிருந்தனர்.
தகவல். மு.சிவக்குமார், மாவட்ட (அமை) செயலர், திருப்பத்தூர்.

Comments
Post a Comment