NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்* எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது

 Siva Tam's Tpt.   

*NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்*

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது

ஆண்டு தோறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. natboard.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பதைப் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 27ஆம் தேதி ஆகும்.

இந்தத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கான அட்மிட் கார்டு https://nbe.edu.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிடப்படும்.

தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவ மாணவிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

1. https://natboard.edu.in/viewnbeexam?exam=neetpg என்ற இணைய பக்கத்துக்குச்செல்லவும்.

2. அப்ளிகேஷன் லிங்க் ('Application Link') என்பதை கிளிக் செய்யவும். பின் Login என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் ஈமெயில், பாஸ்வேர்டு போன்ற விவரங்களை டைப் செய்து உள்நுழையவும்.

4. கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாகப் பார்த்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

5. கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் பதிவைப் பூர்த்தி செய்யவும்.

6. விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் பக்கத்தை சேமித்துக்கொள்ளவும்.

M.Sivakumar BT
Tams Tpt


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு