திருப்பத்தூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம். 05-03-23, தாலுக்கா அலுவலகம்.

 திருப்பத்தூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம்.









https://www.dailythanthi.com/News/State/fasting-on-behalf-of-jacto-jeo-912772

ஆசிரியர் மாநில அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவின்படி பல கட்ட போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் இன்று 5-03-23 ​​மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் தாலுக்கா அலுவலம் எதிரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கையான சிபிஎஸ் ஒழிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை கலைத்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், சரண்டர், ஊக்க ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,  

திரு. மு.சிவக்குமார், திரு.நல்.ஞானசேகர்,    வி .மேகநாதன் , திரு. எம்.சிவலிங்கம் , அருள்மொழிவர்மன், ஆகியோர் தலைமை தாங்கினார். போராட்டத் தொடக்க உரை திரு. இலா.தியோடர் ராபின்சன், மற்றும் நிறைவு உரை திரு. சி.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார் போராட்ட வாழ்த்துரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.பாண்டியன், பா.உதயகுமார், எம்.தேசிங்குராஜன், கே.எம்.நேரு, வ.பிரேம்குமார், சி.சரவணன், மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.இறுதியில் வி.மூர்த்தி நன்றியுரை வழங்கினார். .

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு