சுருக்க மதிப்பீடு (தொகுத்தறி மதிப்பீடு) சில தகவல்கள் ..

 






சுருக்க மதிப்பீடு (தொகுத்தறி மதிப்பீடு) சில தகவல்கள் ..

அனைவருக்கும் வணக்கம் .எண்ணும் எழுத்தும் SUMMATIVE ASSESSMENT   19.09. 2022 முதல் 30.09.2022 வரை மதிப்பீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் 1,2 மற்றும் 3  ஆம் வகுப்புகளுக்கு மதிப்பீடு செய்ய ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 🙏

1,2,3 ஆம் வகுப்புகளுக்கான சுருக்க மதிப்பீடு (தொகுத்தறி மதிப்பீடு) குறித்த சில கருத்துக்கள் .. 

  ✍🏻முதல் பருவத் தேர்வு SA இன்று முதல் 30.09.2022 வரை திறந்திருக்கும் .. 

✍🏻 எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அடிப்படையில் மூன்று பாடங்களுக்கு ( தமிழ் , ஆங்கிலம் , கணக்கு ) நடைபெறும் . 

(சூழ்நிலையில் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை)

✍🏻 மொத்தம் 10 நாட்கள் தேர்வு காலம் உள்ளது. 

✍🏻 மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக இருக்கும் பள்ளிகள் ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்யலாம் .. ( ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் முடித்து விட வேண்டாம் இது சில அலுவலக சிக்கல் வரும் . நமது பணிக்கும் நல்லது . 

✍🏻 மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள் 2, 3 நாட்கள் ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்க. 

( மாணவர் விடுப்பு எடுத்தால் அடுத்த நாள் அந்த மாணவர்களுக்கு மதிப்பீடு செய்க. ) 

 வினாத்தாளில் சில கேள்விகள் எழுதி காட்டும் வகையில் இருக்கும் .. அவ்வாறான வினாக்கள் முறையாக ஒரு குறிப்பு இல் ( சொல்வது எழுதுதல் குறிப்பு) 

மாணவர்களை எழுத சொல்லி வைத்துக்கொள்ளலாம் . ( இதுவும் நமது நலன் சார்ந்தது ..) 

✍🏻 இன்று தமிழ்த் தேர்வு மாணவர்கள் விடுப்பு எடுத்தால் நாளை ஆங்கிலப் பாடத் தேர்வு நடந்தாலும் இன்று வராத மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு மதிப்பீடு செய்யலாம். 

இது இப்படி செய்தால் நமக்கு நன்மை பயக்கும் என்ற முறையின் தனிப்பட்ட கருத்து பரிமாற்றம் மட்டுமே ..

 இதனை உங்கள் வகுப்பறை நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்து கொள்ளுங்கள்

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.