தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கிஉள்ளன
மு. சிவக்குமார், ப.ஆ, Tams Tpt.
கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்
நிரப்ப அரசு உத்தரவு
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் கட்டுநர் பணிக்கு 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கிஉள்ளன.ஊராட்சிகளில் உள்ள கிராம உதவியாளர்கள் வாயிலாக, அரசின் பல்வேறு திட்டங்கள், தகுதியுடைய பயனாளிகள் சென்றடைகிறது.
ஆனால், மாநிலம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்போது, இப்பணிகளை நிரப்புவதற்கான முன்னேற்பாடு துவங்க உள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள், வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகர் எழுதியுள்ள கடிதம்:கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை, வரும் 10ம் தேதி, தாலுகா அளவில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பங்களை நவ., 7 வரை பெற வேண்டும்.விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை, 14ம் தேதியும்; எழுத்து தேர்வை, 30ம் தேதியும் நடத்த வேண்டும். நேர்முக தேர்வை டிச., 15, 16ல் நடத்த வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர்கள் பட்டியலை, 19ம் தேதி வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






Comments
Post a Comment