2009,2010 ஆகிய ஆண்டுகளில் நியமனம் பெற்றவர்களுக்கு 2020,2021 ல் பெறப்பட்ட பணிவரன் முறை ஆணையில் தனியாக பணிவரன் முறை தேவையில்லை என்று நேரிடையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Siva Tam's Tpt.
*TAMS NEWS*
💐💐💐💐💐💐💐💐💐
கடந்த 4.8.2022 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு அறிவொளி அவர்களை நேரில் சந்தித்து, 2012 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 (ஆங்கிலம், கணிதம், அறிவியல்) பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை ஆணை வேண்டி கடிதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் வலியுறுத்தி உரிய பணிவரன்முறை பெற்றபட்டுள்ளது.
2009,2010 ஆகிய ஆண்டுகளில் நியமனம் பெற்றவர்களுக்கு 2020,2021 ல் பெறப்பட்ட பணிவரன் முறை ஆணையில் தனியாக பணிவரன் முறை தேவையில்லை என்று நேரிடையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2012 நியமனம் பெற்றவர்களுக்கு TET தேர்வு குறித்து சர்ச்சை இருப்பதால் பார்வை-3, பார்வை-4 மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு 23.8.2010க்கு முன் தேர்வு செய்வதற்கான நடைமுறை துவங்கி இருந்து அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு செய்திருந்து அதன் பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு உரிய ஆவணங்களைச் சரிபார்த்து விட்டு பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் செயல்முறை வெளியிட்டுள்ளது.
இச்செயல்முறைப் பலமுறை நேரில் வலியுறுத்தி *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பெற்றுத் தந்துள்ளது.*
தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட எந்த அலுவலகத்திலும் கடிதம் கொடுத்துவிட்டு வந்தால் மட்டுமே, கோரிக்கை உடனடியாக நிறைவேறிவிடாது. தொடர்ந்து follow up செய்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும் என்பதை ஆசிரியப் பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப்பணியைச் செய்வதனாலேயே தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தால் அளிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள உங்கள்
*கு.தியாகராஜன்*
*மாநில தலைவர்*
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*




Comments
Post a Comment