மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தித்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு கோரினார்.

 Siva Tam's Tpt.      



மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தித்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு கோரினார்.


*இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர்        சத்திய பிரதாப் சாகு அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்  கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் நேரில் சந்தித்து தேர்தல் நடைபெறும் நாட்களை தவிர்த்து இதர நாட்களில் தேர்தல் பணிகளில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்தோம். குறிப்பாக BLO பணிகளில் இருந்து அரசு பள்ளி மாணவர் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான விலக்கு அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆசிரியர்களின் சிரமங்களை விரிவாக எடுத்துரைத்தோம். கணிவோடு கேட்டுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். விரைவில் ஆசிரியர்களுக்கு BLO பணிகளில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். 

என்றென்றும் ஆசிரியர் நலனில் TAMS. என்னோடு இந்த சந்திப்பில் மாநில செயலாளர். தி. அருள்குமார் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் ப.உதயகுமார் அவர்கள்* உடனிருந்தனர்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு