Tams ன் மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி நமது மாநில தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

 Siva Tam's Tpt.     



நேற்று..

 மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி நமது மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது...

அவர்கள் சார்ந்து நமது நிலைப்பாட்டை நீண்ட நேரம் எடுத்துரைத்தோம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1700 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதியையும், ஏற்கனவே இதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்பதையும் குறிப்பாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை இதுசார்ந்து பேசி வருகிறோம் என்ற செய்தியும் அவர்களிடம் எடுத்துரைத்தோம். 

விரைவில் மாண்புமிகு பள்ளிகளின் துறை அமைச்சர் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் விரைவில் இது குறித்து மேலும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறியுள்ளோம். நிச்சயம் இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றென்றும் துணை நிற்கும் நன்றி

தகவல்

மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர். TAMS.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு