வங்கிகளால் அலையவிடபடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு உதவுவதற்காகவே RBI இருக்கிறது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக மிக எளிதாக RBI யை அணுகலாம் !


வங்கிகளால்  அலையவிடபடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு உதவுவதற்காகவே RBI இருக்கிறது.

                     நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக மிக எளிதாக RBI யை அணுகலாம் !

                       வங்கிக்கு அலைந்து தீர்வு கிடைக்காத நிலையில் RBI யை தொடர்பு கொண்டு மிக எளிதாக எனது கோரிக்கையை சரி செய்த அனுபவத்தை பகிர்கின்றேன்.

                     நண்பர்களே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எனது வங்கி கணக்கை  நெட் பேங்கிங் செய்வதற்காக பொது துறை வங்கிக்கு நேரில் சென்று எனது தகவல்களை கொடுத்து வந்தேன்.

                              மீண்டும் 15 நாட்கள் கழித்து சென்று கேட்டபோது அந்த ஆவணங்கள் எங்கேயோ வைத்து விட்டோம் என்றும், மீண்டும் ஆவணங்கள் கேட்டார்கள்.பொறுமையாக மீண்டும் ஆவணங்களை கொடுத்து வந்தேன்.

                         பிறகும்  நெட்பேங்கிங் செய்யப்படவில்லை. மீண்டும் இரண்டு, மூன்று முறை போன் செய்தோம். வங்கியில் பேசினேன். ஆனால் மீண்டும் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை .

நிறைவாக ஒரு ஈமெயில் அனுப்பினேன்.வங்கியின் ஈமெயில் இணையத்தில் எளிதாக எடுத்துவிட்டேன். இமெயில் அனுப்பியும்  எந்தவிதமான பதிலும் இல்லை.

                        விடா முயற்சி எடுத்து சரியாக 30 நாட்கள் கழித்து மீண்டும் இமெயில் அனுப்பியதற்கு ஏதேனும் பதில்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். எதுவும் இல்லை. உடனடியாக RBI  யின் ஓம் போஸ்ட்மேன் ஆன்லைன் வழியாக அணுகினேன்.

                      அதனில் நாம் அனுப்பிய ஈமெயிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை இணைக்க  சொல்கிறார்கள். அதனையும் சரியான முறையில் தட்டச்சு செய்தேன். வங்கியிலிருந்து 30 நாட்களுக்கு மேலாகியும் ,பதில்கள் வராவிட்டால் தான் நாம் ஓம் போஸ்ட்மேன் அணுக முடியும் . எனவே நான் ஆர்பியை தொடர்பு கொண்ட  அடுத்த நாளே   எனக்கு வங்கி  மேலாளர் அவர்கள் தொடர்பு கொண்டார்கள்.

                              ஏன் சார் நீங்கள் நேரில் வந்து என்னை பார்க்கலாம் என்று கேட்டார்கள். நேரில் வந்து பார்த்தேன் சார் .நீங்கள் லீவு அன்னைக்கு நான் வந்துவிட்டேன். உங்களுடைய அசிஸ்டன்ட் மேனேஜர் பார்த்தேன் என்று கூறினேன்.

                         உடனடியாக அந்த நிமிடமே  போனிலேயே இருந்த இடத்தில் இருந்து எனக்கு தகவல்களை கொடுத்து நெட் பேங்கிங் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

இங்கேயே கவனியுங்கள் நண்பர்களே ! நான்  மூன்று முறை வங்கிக்கு நேரில் சென்று, மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலகட்ட முயற்சிகளுக்கு  பிறகு நடக்காத ஒரு செயல், ஒரு ஈமெயில்  அனுப்பிய உடன் நமக்கு நடக்கிறது என்றால் எந்த அளவிற்கு நாம் பாதிக்கப்படுகிறோம் என்பது இங்கே கவனிக்க வேண்டும்.

                                 ஆனால் விடா முயற்சி எடுத்து நாம் அதனை சரிசெய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம். உடனடியாக எனக்கு தேவையான மற்ற விஷயங்களையும் வங்கியின் மேலாளர் அவர்கள் செய்து கொடுத்தார்கள்.

                                இரண்டாவது முறையாக நான் வங்கிக்குச் செல்லும் பொழுது அவரே முயற்சி எடுத்து எனக்கு தேவையான பல்வேறு செயல்களையும் செய்து கொடுத்து எனது குறைகளை சரி செய்து கொடுத்தார்கள்.

                                  எனவே சரியான முறையில் ஈமெயில் அனுப்புங்கள். இமெயிலுக்கு பதில் வரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக உங்கள் இடத்தில இருந்தே RBI யை அணுகலாம்.எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை.

                    நிச்சயமாக உங்களுக்கு விடா முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஈமெயில் மூலமாக தொடர்பு கொண்டு வங்கி தொடர்பான செயல்களை செய்து கொள்ளலாம்.

எனது குறைகள் சரி செய்யப்பட்ட பிறகும் , மூன்று நாள்கள் கழித்து ஆர்பியையில் இருந்து என்னை தொடர்பு கொண்டு உங்கள் குறை சரிசெய்யப்பட்டு விட்டதா ? உங்கள் காம்ப்லைன்ட்டை முடித்து கொள்ளலாமா? என்று கேட்டு விட்டுத்தான் முடித்து கொண்டோம் என்கிற தகவலை மெயில் வழியாக அனுப்புகிறார்கள் .

                          ஆர்பியை தொடர்பு கொள்ள :  https://cms.rbi.org.in/cms/indexpage.html#eng

தகவல் மு.சிவக்குமார்,
திருப்பத்தூர்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு